ஞாயிறு, அக்டோபர் 16, 2011

முந்தவும் செய்யாது, பிந்தவும் செய்யாது.

அல்லாஹ்வின் திருப்பெயரால்....

ஒவ்வோரு கூட்டதாருக்கும் (வாழ்வுக்கும், வீழ்வுக்கும்) ஒரு காலக்கெடு உண்டு, அவர்களுடைய கெடு வந்துவிட்டால் அவர்கள் ஒருகணப் பொழுதேனும் பிந்தவும் மாட்டார்கள்; முந்தவும் மாட்டார்கள். அல்குர்ஆன் 7:34          .

60 அடி ஆழ குழியிலிருந்து மீட்கப்பட்ட சிறுவனுக்கு சிகிச்சை, மீட்பு குழுவினருக்கு பாராளுமன்றத்தில் பாராட்டு தினத்தந்தி 25-7-2006
தான் ஓட்டி வந்த பஸ்ஸே எமனானது திடீர் பிரேக் போட்ட போது முன்பக்க கண்ணாடி வழியாக ரோட்டில் விழுந்த டிரைவர் சக்கரம் ஏறி இறந்தார் தினத்தந்தி 25-7-2006


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் ....

மனிதனாகப் பிறந்து விட்டால் ஒருநாள் மரணிக்கத் தான் போகிறோம் என்பதில் எல்லோரும் ஒருமித்த கருத்தில் இருப்போம் இதில் யாரும் முரண்படமாட்டோம் நம்புவோம். ஆனால் அந்த மரணம் மனிதனின் மீது எவ்வாறு விதியாக்கப்பட்டுள்ளது அது எவ்வாறு மனிதனை வந்தடைகிறது அதில் இறைவன் தனது அத்தாட்சியை ( வல்லமையை ) எவ்வாறு நிரூபிக்கிறான் என்பதை ஆய்வு செய்து பார்க்க கடமைப்பட்டுள்ளோம். அவ்வாறு ஆய்வுசெய்து இறைவனுடைய அத்தாட்சியை உறுதிப்படுத்திக் கொண்டால் நம்மிடத்தில் இறைநம்பிக்கை வலுப்பெற்று உலகில் தவறுகள் செய்யாமல் விதியை (இறைவனை) நம்பி வாழும் கூட்டமாக மாறலாம்.

இறைவனுடைய வல்லமையை அவனுடைய கூற்றுப் பிரகாரம் நம்ப வேண்டுமென்றால் அவனுடைய வேதத்தைப் (திருக்குர்ஆனை) புரட்ட வேண்டும் அவ்வாறுப் புரட்டினால் அல்லாஹ் எதன் மீது என்ன சொல்கிறான் என்பதை படித்து தெரிந்து கொள்ள முடியும் நம்மில் பெரும்பாலோர் வேதங்களைப் புரட்டுவதில்லை அதனால் மரணம் மனிதனை எவ்வாறு வந்தடைகிறது என்று தெரியவில்லை சாதாரணமாக மனிதனாகப் பிறந்து விட்டால் ஒருநாள் மரணித்துத் தான் ஆகவேண்டும் என்று மேலோட்டமாகவே நம்புவோம் அதனால் அவனது வல்லமையை உணர முடிவதில்லை.

அவனது வல்லமையையும், ஆற்றலையும் உணர்ந்தால் இறைநம்பிக்கை வலுப்பெறும் தவறு செய்ய மாட்டோம். அவனது வல்லமையையும், ஆற்றலையும் உணராமல் மேலோட்டமான நம்பிக்கை இருந்தால் இறைநம்பிக்கை வலுப்பெறாது அதனால் தவறுகள் அதிகம் செய்வோம் உலகில் குழப்பங்கள் அதிகரித்துக் கொண்டு செல்லும் .

ஒவ்வோரு கூட்டதாருக்கும் (வாழ்வுக்கும், வீழ்வுக்கும்) ஒரு காலக்கெடு உண்டு, அவர்களுடைய கெடு வந்துவிட்டால் அவர்கள் ஒருகணப் பொழுதேனும் பிந்தவும் மாட்டார்கள்; முந்தவும் மாட்டார்கள். அல்குர்ஆன் 7:34         
.
60 அடி ஆழ பள்ளத்தில் சுமார் 50 மணிநேரம் உயிருக்கு எந்த ஆபத்தும் ஏற்படாமல் மீட்கப் பட்டான் சிறுபையன் மேலிருந்து கீழ் 60 அடி ஆழத்தில் விழும்போது குழியின் இருமருங்குகளிலும் தட்டித் தட்டித் தான் விழ வேண்டி வரும் இதில் கை,கால், மண்டை உடைவதற்கு பெரும்பாலும் வாய்ப்பிருக்கிறது அல்லது கை,கால், மண்டை உடையாமல் அதே நிலையில் செங்குத்தாக விழுந்தாலும் விழுந்த வேகத்திற்கு இதயத்துடிப்பு நின்று விடுவதற்கு பெரும்பாலும் வாய்ப்பிருக்கிறது, மேலும் பள்ளத்திற்குள் விழுந்த சிலமணிநேரம் கழித்துத்தான் பள்ளத்திற்குள் லைட் வெளிச்சமும், ஆக்ஸிஜனும் கொடுக்கப்பட்டுள்ளது அந்த சிலமணிநேரமும் கும்மிருட்டுக்குள் வெளியிலிருந்து தாராளமாக வந்து செல்லக்கூடிய ஆக்ஸிஜன் இல்லை அதனால் இந்த இடைப்பட்ட சில மணி நேரமும் அவனுடைய உயிர் பிறிவதற்கு போதுமான சூழலாகும். ஆனாலும் அதையும் மீறி அந்த உயிர் பிரியாமல் இருந்திருக்கிறது என்றால் அவர்களுடைய கெடு வந்துவிட்டால் அவர்கள் ஒருகணப் பொழுதேனும்  முந்தவும் மாட்டார்கள். அல்குர் ஆன் 7: 34 அந்த சிறுவனுக்கு இறைவனால் விதிக்கப்பட்ட காலக்கெடு இன்னும் இருப்பதால் இறைவன் அவனது உடலுக்கும் உயிருக்கும் ஆபத்து ஏற்படாமல் அவனை தனது பொறுப்பிலேற்றுக் கொண்டான் அதனால் மரண விளிம்பிறகுச் சென்றும் மரணிக்காமல் திரும்பி விடுகிறான்

அதே தினத்தில் தினத்தந்தி கொடுத்த அடுத்தச்செய்தி 28 வயதை உடைய சந்திரமவுலி தனது பஸ்ஸூக்கு முன்னால் சென்ற லாரி பிரேக் போட்டதைப் பார்த்து தானும் அழுத்திப் போட்ட பிரேக் அவரை வெளியில் தூக்கியெறிந்து அதே பஸ் சக்கரம் அவரின் மீது ஏறி அதே இடத்தில் இறந்து விடுகிறார் அவர் ஓட்டிச் சென்ற பஸ்ஸூக்கு முன் சென்ற லாரி அழுத்தி பிரேக் போட்டு விட்டு மீண்டும் பழைய வேகத்திலேயே செல்லத் தொடங்கியது என்று அந்த செய்தி கூறுகிறது. இது நடைமுறைக்கு முற்றிலும் சாத்தியமில்லாத ஒன்றாகும் காரணம் அவ்வளவு வேகத்தில் பிரேக் அழுத்தினால் வண்டி நின்று விட்டு மீண்டும் தனது பழைய வேகத்திற்கு திரும்புவதென்றால் ஏறத்தாழ சில நிமிடங்கள் பிடிக்கும் வரிசையாக ஒவ்வொரு கியராக மாற்றி நான்கு கியர்களும் போட்டு அதன் பிறகே அதனுடைய பழைய வேகத்திற்கு திரும்பும் அதனால் இறந்து போன சந்திரமவுலியுடைய கண்களுக்கு இறைவன் அது போன்ற ஒரு மிரட்சியை ஏற்படுத்தி பிரேக் போடச்செய்து அவரை மட்டும் அலக்காக வெளியில் தூக்கி எறிந்து கண்இமைக்கும் ஒரு கணப்பொழுதில் அவர் ஓட்டி வந்த அதே வாகணத்தின் சக்கரத்தை ஏற்றச் செய்து மரணிக்கச் செய்து விட்டான் அவர்களுடைய கெடு வந்துவிட்டால் அவர்கள் ஒருகணப் பொழுதேனும் பிந்தவும்  மாட்டார்கள். 7:34  
     
குறிப்பு : மேல்படி சந்திரமவுலி ஓட்டிவந்த பஸ் வேறு எதிலும் மோதி சேதாரம் ஆனதாகவோ, அதன் மூலம் உள்ளே இருந்த பயணிகள் மரணித்ததாகவோ அச்செய்தியில் மேலதிக தகவல் இல்லை

ஆகவே மேற்கானும் இரண்டு சம்பவங்கள் ஒரே நாள் நாளிதழில் கண்டதில் நமக்கு திருமறையில் ஏழாவது அத்தியாயத்தில் முப்பத்தி நான்காவது வசனத்தில் அல்லாஹ் கூறியது நினைவுக்கு வந்ததால் இக்கட்டுரை வடிவமைக்கப்பட்டது 
.
நமக்குரிய கெடு வரும்போது நாம் எப்படிப்பட்ட இடத்தில் என்ன நிலையில் இருந்தாலும் அது வந்தடைந்தே தீரும் என்பதை விளங்கிக்கொண்டு நமது செயல்பாடுகள் வல்ல அல்லாஹ்வை முன்னோக்கியதாக இருக்க வேண்டும் குர்ஆன் நெடுகிலும் அல்லாஹ் தனது அத்தாட்சிகளை இதற்கு முந்தைய சமுதாயத்தவர்களுக்கு வழங்கி தெளிவு படுத்தினான் அவற்றை அவர்கள் தங்களது கண்களால் கண்டப்பின்பும் அந்த அத்தாட்சிகளை பொய்படுத்தினார்கள் அதனால் இறைவனின் கோபம் அவர்கள் மீது எவ்வாறு இறங்கியது அந்த சமுதாயம் எவ்வாறு அழிக்கப்பட்டது என்பதையும் தனது திருமறையில் பல இடங்களில் விவரித்துக் கூறுகிறான்

''நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும்;. நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே! 4:78       .



وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்

கருத்துகள் இல்லை: